EB Complaint Letter Format in Tamil" width="600" height="325" />
and Employment News" width="390" height="182" />EB Complaint Letter Format in Tamil:- வணக்கம் நண்பர்களே இது என்னதான் இன்டர்நெட் உலகமாக இருந்தாலும் அரசு அலுவலகங்களுக்கு பொதுவாக நாம் புகார் கொடுக்க வேண்டும் என்றால் நாம் புகார் கடிதம் மூலமாக மட்டுமே புகார் கொடுக்க முடியும். நமக்கு கடிதம் எழுதும் பழக்கம் இருந்தால் தானே நாம் புகார் கடிதம் எழுத முடியும். இன்றைய காலகட்டத்தில் என்னதான் படித்தவர்களாக இருந்தாலும் அவர்களிடம் சென்று புகார் கடிதம் எழுதித்தாருங்கள் என்று கேட்டல் சாரிங்க எனக்கு கடிதம்லாம் எழுத தெரியாது சொல்லுவாங்க. இதற்கு என்ன காரணம் என்றால் எல்லாம் இன்டர்நெட் தான். அனைத்து விஷயங்களையும் இப்போது அனைவரும் ஆன்லைன் மூலமாகவே செய்துவிடுகின்றன. சரி விடுங்க நாங்கள் சொல்ல வருகின்ற விஷயத்திற்கு வருகிறேன். அதாவது மின்சாரம் சார்ந்த புகார் கடிதம் தமிழில் எப்படி எழுதுவது என்று பதிவு செய்துள்ளோம் அவற்றை படித்து தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே, பயனுள்ளதாக இருக்கும். எங்கள் முதல் பதிவில் EB பில் பிரச்சனைக்காக மின்வாரியத்திற்கு புகார் கடிதம் எழுதுவது எப்படி என்று பார்ப்போம்.
EB பில் பிரச்சனைக்காக மின்வாரியத்திற்கு புகார் கடிதம் எழுதும் முறை:
அனுப்புநர்:
பெயர்: XXX
முகவரி: உங்களுடைய முழுமையான முகவரியை எழுதிக்கொள்ளுங்கள்.
பெறுநர்:
மின்சார துறை அதிகாரி பெயர் அல்லது வகிக்கும் பதவி,
உங்கள் ஊரின் மின்சார துறையின் முகவரியை எழுதிக்கொள்ளுங்கள்.
பொருள்: மின்சார கட்டணத்திற்கான விண்ணப்பம்.
மதிப்பிற்குரிய ஐயா:
என் பெயர் XXX மற்றும் என் மின்சாரம் மீட்டர் எண் 123456789. கடந்த மூன்று மாதங்களில் இருந்து எங்கள் வீட்டில் மின் கட்டணம் அதிகரித்துள்ளது என்பதை நான் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன், ஆனால் எங்கள் வீட்டில் அதிக அளவில் மின்சாரத்தை பயன்படுத்த மாட்டோம். இருப்பினும் கடந்த மூன்று மாதங்களாக எங்கள் வீட்டில் மின் கட்டணமானது அதிகரித்துள்ளது. ஒருவேளை மீட்டரில் பிரச்சனை இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
எனவே, டிஎன்இபி டிஜிட்டல் மீட்டர் அளவிடுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் தயவுசெய்து சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் கடந்த மூன்று மாதங்களில் இருந்து மின்சார கட்டணத்தில் திருத்தம் செய்ய வேண்டுகிறேன்.
விண்ணப்பதாரரின் கையொப்பம்:
xxxx
விண்ணப்பதாரரின் தொலைபேசி எண்: 1234567890
TNEB Digital Meter Reading பார்ப்பது எப்படி? தெரிஞ்சிக்கலாம் வாங்க |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |